Jun 5, 2015

கெத்து படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த முருகதாஸ்

உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘கெத்து’ படத்தில் நடித்து வருகிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். மேலும் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜும், வில்லனாக விக்ராந்தும் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இப்படத்தை இயக்கி வருகிறார். இவர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் என்று விசிட் அடித்திருக்கிறார் முருகதாஸ். அங்கு படக்குழுவினருடன் ஜாலியாக பேசிவிட்டு சென்றிருக்கிறார். இவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தது படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
திருக்குமரன் ஏற்கனவே இயக்கிய ‘மான் கராத்தே’ படத்தில் முருகதாஸ் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றிருந்தார். அதுபோல் ‘கெத்து’ படத்திலும் முருகதாஸ் சிறப்பு தோற்றத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Adsense