Jun 5, 2015

டெர்மினேட்டரின் அடுத்த பாகம் ஜூலை 3-ல் வெளியாகிறது

ஆக்‌ஷன் மற்றும் அதிரடி நிறைந்த கதையம்சம் கொண்ட டெர்மினேட்டர் பட வரிசையில் அடுத்த பகுதியான ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ என்ற படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படம் தமிழில், ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ என்ற பெயரில் வெளிவருகிறது. இதில், டெர்மினேட்டராக அர்னால்டு நடித்துள்ளார். ‘தோர்’, ‘தி டார்க் வேர்ல்ட் அண்ட் கேம் ஆஃப் த்ரான்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ஆலன் டெய்லர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்கைடான்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பாராமவுண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வையாகம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகிறது.
ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஐமேக்ஸ் 3டி, 3டி டிஜிட்டல் மற்றும் 2டி என அனைத்து தொழில்நுட்பத்திலும் இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.

No comments:

Adsense