Jun 15, 2015

ஹன்சிகாவுடன் செல்ஃபி, நயன்தாராவுடன் குல்ஃபி: விவேக் ஐடியா

இரத்த தான அமைப்பு ஒன்று குறும்பட போட்டிகளை நடத்த திட்டமிட்டு இருந்தது.
இன்று இரத்ததான தினத்தை முன்னிட்டு, அதன் துவக்க விழா நடைபெற்றது. இதன் நடுவர்களான இயக்குனர்கள் ஏ.எல் விஜய், ராம், பாண்டியராஜன், நடிகர் விவேக் மற்றும் யூகிசேது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் சின்னக் கலைவானர் விவேக் ரத்த தானத்தை பற்றி பேசும் போதும், தனது காமெடி பேச்சுகளை வெளிப்படுத்தினார். இதன் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இரத்தம் கொடுத்தால் ஹன்சிகாவுடன் செல்ஃபி எடுக்கலாம், நயன்தாராவுடன் குல்ஃபி (குரூப்பாக) எடுக்கலாம் என வைத்தால் இரத்தம் அளவில்லாமல் குவியும், என நகைச்சுவையாக பேசினார்.
அதனை விட நமீதா என்று சொன்னால் அதனிலும் அதிக இரத்தம் கிடைக்கும் என்றும், எனக்கும் ஹன்சிகாவுடன் செல்ஃபி எடுக்க ஆசை என கூறினார்.
என்ன செல்ஃபி, குல்ஃபி எடுக்க தயாரா?

No comments:

Adsense