May 10, 2014

அமலாபால், விவேக்குக்கு கொடுத்த வாக்கு!!!

நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்ய உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழ் சினிமாவில் காலம் காலமாக தொடர்ந்து வரும் கலாச்சாரம் என்னவென்றால் நடிகைகள் தங்கள் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார்கள்.

இது அமலாபாலுக்கும் பொருந்துமா என்று யோசித்து கொண்டு இருந்த ரசிகர்களுக்கு விடை கிடைத்து விட்டது. நடிகர் விவேக்கும், அமலாபாலும் "வேலையில்லா பட்டதாரி" படத்தில் நடிக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று விவேக் கேட்டதற்கு, அமலாபால், கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதை விவேக் தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

No comments:

Adsense