சமீபத்தில் வெளியான ‘டார்லிங்’, ‘காஞ்சனா 2’, ‘டிமான்ட்டி காலனி’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இளம் இயக்குனர்களும், நடிகர்களும் பேய் படத்தை உருவாக்கவே அதிகம் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது சிபிராஜ் நடித்து வரும் ‘ஜாக்சன் துரை’ படமும் பேய் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ‘பர்மா’ படத்தை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் சத்யராஜ் பேயாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் பெண் பேய்கள் ஆதிக்கம் செய்து வந்த நிலையில் தற்போது ஆண் பேய்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.



No comments:
Post a Comment